Weight | N/A |
---|---|
weight | 1kg, 250g, 500g |
Shop
Mango Ginger Maa inchi / மா இஞ்சி
Price range: ₹45.00 through ₹145.00
Mango Ginger Maa inchi / மா இஞ்சி மாங்காய் இஞ்சியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. புற்றுநோய் கட்டிகளை தடுப்பதில் இருந்து, பாலியல் புணர்ச்சியை தூண்டுவது வரை இது ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கிறது. இந்த இஞ்சியை உணவில் சேர்த்துக் கொண்டால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என பார்ப்போம். மாங்காய் இஞ்சி விஞ்ஞான ரீதியாக குர்குமா அமாடா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தனித்துவமான மசாலாப் பொருள் ஆகும். இது பார்ப்பதற்கு இஞ்சியை போன்று இருக்கும். இதை மாங்காய் இஞ்சி என்று அழைப்பதற்கு முக்கிய காரணம் இதன் சுவை மாம்பழத்தின் சுவை போன்று இருக்கும். இந்த இஞ்சி ஜிங்கிபெரேசியே என்ற இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்தது. மஞ்சளுடன் நெருங்கிய தொடர்பு உடையது. மாங்காய் இஞ்சியை மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஜாவா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் குஜராத், மேற்கு வங்கம், கேரளா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் இந்த இஞ்சி பயிரிடப்படுகிறது.
இந்த மாங்காய் இஞ்சியை ஆயுர்வேதத்தில் நிறைய வழிகளில் பயன்படுத்துகின்றனர். காய்ச்சல், தோல் வியாதிகள், ஆஸ்துமா மற்றும் வயிற்று கோளாறுகளை போக்க உதவுகிறது. இந்த இஞ்சியை ஊறுகாய், சட்னி மற்றும் சாஸ்களில் பயன்படுத்தலாம். இதில் ஆன்டி பைரியடிக் தன்மை, அழற்சி எதிர்ப்பு தன்மை, டையூரிடிக் தன்மை மற்றும் மலமிளக்கி தன்மை போன்றவை காணப்படுகிறது. இதை யுனானி மருத்துவத்திலும் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இதன் நன்மைகளைப் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
Mango Ginger Maa inchi / மா இஞ்சி மாங்காய் இஞ்சியில் வேதியியல் பொருட்களான ஸ்டார்ச், ஃபைபர்ஸ், பினோலிக் அமிலங்கள், எண்ணெய்கள், குர்குமினாய்டுகள் மற்றும் டிஃபுரோகுமெனோனால், அமடானுலன் மற்றும் அமடால்டிஹைட் போன்ற டெர்பெனாய்டுகள் உள்ளன. அதே மாதிரி மாங்காய் நறுமணத்திற்கு காரணமான சேர்மங்களான பினீன், டெல்டா -3-கேர்ன், (Z) -பீட்டா-ஒசைமின் மற்றும் மைர்சீன் (பீட்டா-மைர்சீன்) போன்ற பொருட்கள் காணப்படுகிறது. மாங்காய் இஞ்சியில் பாலிபினால்கள் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இதில் அந்தோசயினின்கள், ஃபிளவனோன்கள், ரெஸ்வெராட்ரோல், எலாஜிக் அமிலம் மற்றும் ஐசோஃப்ளேவோன்கள் உள்ளன. புதிய மற்றும் உலர்ந்த இஞ்சி சாற்றில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட பைட்டோ கெமிக்கல்கள் பதிவாகியுள்ளன
மாங்காய் இஞ்சியில் குர்குமின், டெமெத்தாக்ஸி குர்குமின் மற்றும் டெஸ்-மெத்தாக்ஸி குர்குமின் போன்ற மஞ்சளில் உள்ளது போன்ற குர்குமினாய்டுகள் உள்ளன. இந்த குர்குமின் பசியைத் தூண்ட உதவுகிறது. எனவே இதை சமையலில் சேர்த்து வந்தால் நல்ல பசி உணர்வை பெறுவீர்கள்.
மாங்காய் இஞ்சியில் ஆன்டிடிரஸன் பண்புகள் காணப்படுகிறது. இதில் மனதை அமைதிப்படுத்தும் பண்புகள் இதில் காணப்படுகிறது. கார்மினேட்டிவ் பண்புகள் இதில் காணப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை அமைதிபடுத்துகிறது, கவலை, மனநிலை மாற்றங்கள் மற்றும் தலைவலி போன்ற மனச்சோர்வு அறிகுறிகளில் இருந்து விடுபட உதவுகிறது. இந்த மசாலாவின் வாசனை மனதை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது.
மாங்காய் இஞ்சியில் புற்றுநோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. மரபணு செயல்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை தடுக்கிறது. கீமோதொரபி போன்ற புற்றுநோய் சிகிச்சைகளுடன் சேர்ந்து இதை பயன்படுத்தி வரலாம். மாங்காய் இஞ்சியில் ஆக்ஸினேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.
மாங்காய் இஞ்சியில் ப்ளோவனாய்டுகள் உள்ளன. இதில் ஆன்டி பைரியடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. உடம்பில் உள்ள அதிகப்படியான சூட்டை குறைக்க உதவுகிறது. காய்ச்சலை உண்டாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது
மாங்காய் இஞ்சி பாலியல் ஆசைகளைத் தூண்ட உதவுகிறது. பாலியல் செயல்திறனை மேம்படுத்துகிறது. பாலியல் இன்பங்களை அதிகரிக்கிறது. மாங்காய் இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. அவை உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கப் பயன்படுகிறது. இது பாலியல் ஆசையைத் தூண்ட உதவுகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்கள் விந்து இனப்பெருக்க உறுப்புக்கு சேதம் விளைவிக்காமல் காக்க உதவுகிறது.
மாங்காய் இஞ்சி எலும்புகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மாங்காய் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸினேற்ற விளைவுகள் உள்ளன. இது மூட்டு வலி போன்ற கீல் வாத பிரச்சினைகளை போக்க பெருமளவில் உதவுகிறது.
நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற வளர்ச்சிதை மாற்ற கோளாறுகளுக்கு உடல் பருமன் மிக முக்கியமான காரணம் ஆகும். மாங்காய் இஞ்சியில் குர்குமின், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இது உடல் பருமனுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இதிலுள்ள குர்குமின் அடிபோசைட்டுகள் தசை செல்கள், மேக்ரோபேஜ்கள் மற்றும் கணைய உயிரணுக்களுடன் தொடர்பு கொண்டு உடல் பருமனுடன் தொடர்புடைய அழற்சி காரணிகளை ஒடுக்க உதவுகிறது என்று ஆய்வு கூறுகிறது.
Mango Ginger Maa inchi / மா இஞ்சி மாங்காய் இஞ்சியில் எக்ஸ்பெக்டரண்ட் என்ற செயல்பாடு உள்ளது. இது சுவாசப் பாதையில் சளியை தடுக்கிறது. இது இருமலுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. மாம்பழ இஞ்சியில் உள்ள ஆல்பா-ஜிங்கிபெரீன், குப்பரேன், பீட்டா-பிசாபோலின் மற்றும் காமா குர்குமின் போன்ற பண்புகள் காணப்படுகிறது. மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
Mango Ginger Maa inchi / மா இஞ்சி மாங்காய் இஞ்சி ஒரு சிறந்த மலமிளக்கியாகும். இதில் நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து போன்றவை நிறைந்த மூலங்களாக உள்ளது. நார்ச்சத்துக்கள் மலம் களிப்பதை எளிதாக்குகிறது. மாங்காய் இஞ்சி ஒரு டையூரிடிக் என்பதால் மலத்தில் தண்ணீர் சத்தை அதிகரித்து மலச்சிக்கலை போக்குகிறது.
இது வயிற்று வலி, அஜீரணம், மோசமான செரிமானம், அமில பிரச்சினைகள், வாய்வு போன்ற பிற வயிற்று பிரச்சினைகளை போக்க உதவுகிறது. பித்த நீர் உற்பத்தியை தந்து சீரணிக்க உதவி செய்கிறது.
பித்த தோஷத்தில் சமநிலையின்மை ஏற்படுவதால் சரும பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளது. மாங்காய் இஞ்சியில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் மற்றும் குளிர்ச்சியான தன்மை அழற்சி, எரிச்சல், சரும வடுக்கள் போன்றவற்றை போக்க உதவுகிறது.
மாங்காய் இஞ்சியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. புற்றுநோய் கட்டிகளை தடுப்பதில் இருந்து, பாலியல் புணர்ச்சியை தூண்டுவது வரை இது ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கிறது. இந்த இஞ்சியை உணவில் சேர்த்துக் கொண்டால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என பார்ப்போம்.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review