MY CART
- No products in the cart.
நடைமுறை அனுபவங்கள்: சில நேரங்களில் சில வகை பழங்கள் , கீரைகள் அல்லது மற்ற உணவு பொருட்கள் வாடிக்கையாளர்கள் உணவுக்காக, சுவைக்காக , விருப்பத்திற்காக அல்லாமல் அவசர கால நோய்க்கு மருந்தாக பயன்படுத்த ஆர்டர் செய்கிறார்கள். அப்பொழுது சில நேரங்களில் சாதாரணமாக வயல் வரப்புகளில் கிடைக்கும் கீரைகள், தினசரி கிடைத்துக்கொண்டிருக்கும் பழங்கள் கூட கிடைக்காமல் போகிறது , சில சமயங்களில் அப்படியே அதிக நேரம் , பணம் செலவழித்து அனுப்பி வைத்தாலும் போகும் வழியிலேயே வழக்கத்திற்கு மாறாக அழுகி கெட்டுப்போய் வாடிக்கையாளரை சென்றடைகிறது. இவை அனைத்தும் பண மதிப்பு மற்றும் உழைப்பிற்கு மீறிய வீரியம் கொண்ட கர்மா நிகழ்த்தும் நிகழ்வாகும். இதில் சிக்கிக்கொண்ட வாடிக்கையாளர்கள் என்னுடைய பணம் வீணாகிவிட்டது , ஏமாற்று காரர்கள், அவசரத்திற்கு பொருட்கள் அனுப்பவில்லை என வசைபாடுகிறார்கள். ஆனால் ஒருவேளை பொருட்கள் வரும்வழியில் நசுக்கி விட்டாலோ , பாதிப்படைந்து விட்டாலோ அதனை போட்டோ எடுத்து அனுப்பின்னால் மீண்டும் நாங்கள் பணம் ஏதும் வாங்காமல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்க தவறியதில்லை. நாம் செலவழிக்கும் பணம் மற்றும் உழைப்பினை விட பெரிய ஆற்றல்கள் இங்கே உள்ளன என்பதை உணர்ந்து கொள்வதே சிறந்ததாகும்.
Apt Ayyavu