Shop

Magali kilangu Swallow Root / மாகாளிக் கிழங்கு

(1 kg)

Original price was: ₹380.00.Current price is: ₹350.00.

Estimated delivery dates: Wednesday 19. November - Thursday 20. November

Magali kilangu (swallow root)மாகாளிக் கிழங்குகள் ஆயுர்வேத மருத்துவத்திலும், ஊறுகாய் செய்யவும் பயன்படுகிறது. மலையில் விளைந்தால் மாகாளி… நாட்டில் விளைந்தால் நன்னாரி!’ என்றொரு பழமொழி உண்டு. ஆனால், தாவரவியல் ரீதியாக இவை இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இரண்டுக்குமான வாசனை மட்டுமே ஒன்றாக இருக்கும். மாகாளி, வேர்ப் பகுதியைச் சேர்ந்தது என்பதால் மலைப்பகுதிகளில் விளைச்சல் அதிகமாக இருக்கும். இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்குமென்பதால், பலரும் இதைத் தவிர்த்துவிடுகின்றனர். பல்வேறு நன்மைகளைக் கொண்ட இந்தக் கிழங்கைப் பயன்படுத்தி ஆரோக்கியம் காக்கலாம். மாகாளிக் கிழங்கை அடிப்படையாகக் கொண்டு ஊறுகாய் தயாரிப்பதன் மூலம், அனைவருக்கும் பிடித்த ஓர் உணவாக இதை மாற்றலாம்.

சுவையான `மாகாளிக் கிழங்கு ஊறுகாய்’ ரெசிபி.

ஊறுகாய் தயாரிப்பதற்குப் பிஞ்சு மாகாளிக் கிழங்கைப் பயன்படுத்துவது நல்லது. கிழங்கை இரவு முழுவதும் நீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். தோல் சீவும்போது, கிழங்கின் நடுப்பகுதியிலுள்ள நரம்பு போன்ற வேர்ப் பகுதியைக் கட்டாயம் நீக்கிவிடவேண்டும். உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில், ஏற்கெனவே நன்றாக வறுத்துப் பொடி செய்து வைத்துள்ள கடுகைச் சேர்க்க வேண்டும். பிறகு, இவை அனைத்தையும் கெட்டித் தயிரில் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். தயாரித்து வைத்துள்ள கெட்டித்தயிர் கலவையில், நறுக்கி வைத்த மாகாளிக் கிழங்குத் துண்டுகளைச் சேர்க்க வேண்டும்.

இந்தக் கலவையை டப்பா அல்லது சிறிய பாத்திரத்தில் சேமித்து வைத்து தொடர்ச்சியாகப் பத்து நாள் வரை காற்றோட்டமான இடத்தில் உலர வைக்க வேண்டும். வெயிலில்தான் உலர்த்த வேண்டும் என்ற கட்டாயமில்லை நிழலிலும் உலர்த்தலாம். ஃப்ரிட்ஜிலோ குளிர்ச்சியான இடத்திலோ சேமித்து வைக்கக்கூடாது. பத்து நாள் உலர்ந்ததும் சுவையான ஊறுகாய் தயாராகிவிடும்.

magali kilangu / swallow root  மாகாளிக் கிழங்கின் சுவை பிடிக்காதவர்கள், எலுமிச்சைப்பழம் அல்லது மாங்காய் இஞ்சியை நறுக்கி கிழங்குடன் சேர்த்துக்கொள்ளலாம். எலுமிச்சைப்பழச் சாற்றையும் கிழங்கில் சேர்த்துப் பயன்படுத்தலாம். இதனால் புதிய சுவை கிடைப்பதுடன் ருசியும் அதிகரிக்கும். ஊறுகாய் தயாரானதும் அதை ஃப்ரிட்ஜில் பதப்படுத்திவைத்துப் பயன்படுத்தலாம்.

நன்மைகள்:

மாகாளிக் கிழங்கு, வேர் வகையைச் சேர்ந்தது என்பதால் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ரத்தக்கட்டு, வாதம், காயம், ரத்தச்சோகை, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கான மருந்துகளுடன் சேர்க்கப்படுகிறது.

மாகாளிக் கிழங்கு, நச்சுகளை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்னை உள்ளவர்கள் உப்பு, எண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துவர். அப்படியானால் ஊறுகாய் வகைகள் அனைத்தையுமே அவர்கள் தவிர்க்க வேண்டியிருக்கும். ஆனால் மாகாளிக்கிழங்கு ஊறுகாயை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உப்பை அறவே தவிர்க்க வேண்டுமென நினைப்பவர்கள், ஊறுகாய் தயாரிக்க இந்துப்பைப் பயன்படுத்தலாம்.

உடல் சூட்டைக் குறைக்க உதவும்; பசியை அதிகரிக்கும்; செரிமானப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவும்.

சில நேரங்களில், சரும ஒவ்வாமைக்கான மருந்தாகவும் மாகாளிக்கிழங்கு magali kilangu / swallow root பரிந்துரைக்கப்படுவதுண்டு. இதிலுள்ள சில வேதிப்பொருள்கள் மூட்டு வலியைக் குறைக்க உதவும். magali kilangu buy online

Weight 1 kg
Customer reviews
0
0 ratings
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
Reviews

There are no reviews yet.

Write a customer review
Be the first to review “Magali kilangu Swallow Root / மாகாளிக் கிழங்கு”
Your recently viewed items

Queen Veggies(1.5kg)

(1/2 kgs Each)
0
Original price was: ₹100.00.Current price is: ₹80.00.
0
Original price was: ₹1,500.00.Current price is: ₹1,100.00.
1
Price range: ₹72.00 through ₹720.00
Add To Cart This product has multiple variants. The options may be chosen on the product page
0
Original price was: ₹380.00.Current price is: ₹350.00.
0
Original price was: ₹3,750.00.Current price is: ₹3,500.00.
0
Price range: ₹45.00 through ₹145.00
Add To Cart This product has multiple variants. The options may be chosen on the product page
0
Original price was: ₹300.00.Current price is: ₹280.00.
0
Original price was: ₹150.00.Current price is: ₹130.00.
Products in My Cart!
Home
Account
34
Orders
Tracking
Search
×
34