| Weight | 0.100 kg |
|---|
Shop
Thuthi Leaf Powder / துத்தி இலை பொடி (100g)
(100g)
Original price was: ₹120.00.₹75.00Current price is: ₹75.00.
Estimated delivery dates: Wednesday 22. April - Thursday 23. April
துத்தி இலை பொடி (thuthi leaf powder). துத்திப் பூவால் ரத்த வாந்தி நிற்கும். காச ரோகம் நீங்கும். சுக்கில (விந்து) விருத்தி உண்டாகும், தேகம் குளிர்ச்சி அடையும் என்று `அகத்தியர் குணபாடம்’ துத்தியின் மேன்மையைப் பறைசாற்றுகிறது.
மூலநோய்: குறிப்பாக, இந்த கீரையை, மூலநோய்க்கு மருந்தாக பயன்படுத்தி தீர்வு காண்கிறார்கள்… மருந்தாக இல்லாவிட்டாலும், வாரத்துக்கு ஒருமுறை, இந்த கீரையை அரைத்து வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்தாலே, மூலநோய் குணமாகும் என்கிறார்கள். இதைத்தவிர, சிறுநீர் எரிச்சலை தணிக்கிறது.. வாயு வியாதிகளை அகற்றுகிறது.. வாய்ப்புண், குடல்புண்களை ஆற்றுகிறது.. உடலில் கட்டிகள், புண்கள் இருந்தால் அதையும் ஆற்றுகிறது. இதற்கு அரிசி மாவுடன் துத்தி இலை சாற்றை கலந்து கட்டினாலே போதும்.. பசும்பாலுடன் இந்த துத்திஇலையை பொடி செய்து சாப்பிட்டாலே உடல் குளிர்ச்சி பெறும்.. வாய், பற்கள், இரைப்பை முதல் பெருங்குடல், ஆசனவாய் வரை ஏற்படும் புண்கள் வலிகள், எரிச்சல்களை நீக்கக்கூடியது. அரிசி மாவுடன் துத்தி இலை சாற்றையும் கலந்து, உடலிலுள்ள கட்டிகள் மீது பூசினால், அவை பழுத்து உடைந்து குணமாகும்
கோளாறுகள்: அதேசமயம், பெண்களுக்கு இந்த கீரையை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. கருப்பை கோளாறுகளை ஆரம்பத்திலேயே தீர்க்கக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு.. மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியும், அதிக உதிரப்போக்கும் இருந்தால், இந்த கீரையை சமைத்து சாப்பிட்டாலே போதும். ஒரு கைப்பிடி அளவுக்கு துத்தி இலையை சுத்தம் செய்து, நன்றாக அலசி, தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். இதில், சுட்டு கரியாக்கிய வசம்பு கரியை சிறிது சேர்த்து வெறும் வயிற்றில் 3 நாள் குடித்து வந்தாலே மாதவிலக்கு வலிகள் நீங்கும். அதேபோல, வெள்ளைப்படுதல் பிரச்சனையை, முழுமையாக தீர்க்கவும் இந்த கீரைதான் உதவுகிறது. வெள்ளைப்படுதலை ஆரம்பக்கட்டத்திலேயே சரி செய்யாவிட்டால், மிகத்தீவிரமாகி பல தொந்தரவுகளை தந்துவிடும். எப்படி சாப்பிடலாம்: இதுபோன்ற பாதிப்புள்ளவர்கள், வாரம் ஒருமுறையாவது துத்திக்கீரையை பசும்நெய்யும் வதக்கி சமைத்து சாப்பிட்டாலே போதும். அல்லது, இந்த துத்தி இலையை சுத்தம் செய்து, கழுவி, நெய்யில் வதக்கி சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிட்டாலும், பெண்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும். அல்லது, இந்த கீரை விதையின் பொடியை, வெதுவெதுப்பான நீரில் குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.. அல்லது பாசிப்பருப்பு வேகவைத்து துத்தி இலைகளை சேர்த்து நெய் சேர்த்து வதக்கி சாதத்தில் கலந்து, 48 நாட்கள் சாப்பிட்டு வந்தாலும் வெள்ளைப்படுதல் கட்டுக்குள் வரும்..
ஆண்மை குறைபாடு: துத்திப் பூவை ஒரு கைப்பிடி எடுத்து, பசும்பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால், உடலில் வெப்பம் தணிந்து ஆண்மை குறைபாடு நீங்கும்.. தாது விருத்தியும், விந்து உற்பத்தித்திறனும் அதிகரிக்கும் என்பார்கள்.. அல்லது இந்த கீரையிலிருந்து சாறு எடுத்து, ஒரு கிளாஸ் மோருடன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் விந்து குறைபாடு சீராகும். துத்தி செடியின் இலை, பூ, காய், வேர், இப்படி அனைத்தையுமே பறித்து, சுத்தம் செய்து, கஷாயம் போல வைத்து குடித்து வந்தாலும் ஆண்மை அதிகரிக்கும்.. அந்தவகையில், ஆண்கள், பெண்கள் என இரு தரப்புக்குமே எண்ணற்ற ஆரோக்கியத்தை இந்த கீரை வழங்குவதால், மருத்துவரின் முறையான ஆலோசனையை பெற்று, பலன் பெறலாம்.
GST information
Scan QR



Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review