Weight | 0.35 kg |
---|
Shop
Mookirattai Keerai / மூக்கிரட்டை கீரை
Original price was: ₹40.00.₹25.00Current price is: ₹25.00.
மூக்கிரட்டை இது புட்பகம், மூக்குறட்டை என்றும் வயதானவர்களால் அழைக்கப்படுகிறது. மூலிகை குறித்து அறிந்தவர்கள் இதை புனர்நவா என்று அழைக்கிறார்கள். அதாவது உடலுறுப்புகளின் செயல்பாடுகளை புதுப்பிக்கும் மருத்துவ குணங்கள் இதில் அடங்கியிருப்பதால் இப்படி அழைக்கப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் அளவு மேம்பட மூக்கிரட்டை சேர்க்கலாம். மூக்கிரட்டை இலைகளின் சாற்றை எடுத்து வந்தால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கும். இது இன்சுலின் அளவையும் மேம்படுத்த செய்கிறது.
எப்படி எடுப்பது
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உணவுக்கு முன்பு இந்த இலையை சாறு எடுத்து 10 மில்லி அளவு குடித்து வரவேண்டும்.
சிறுநீரக கோளாறுக்கு மூக்கிரட்டை எப்படி எடுப்பது?
ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா, கிரியேட்டின் அளவை மூக்கிரட்டை குறைப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இது கல்லீரலில் உண்டாகும் பாதிப்புகளையும் தடுக்கிறது. சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் வலி கணுக்கால் வீக்கம் போன்றவை குறைக்கும். மூக்கிரட்டை விதை சிறுநீரக கற்களை வெளியேற்றும் வல்லமை கொண்டது. சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக்கும் அருமருந்தாக இருக்கும்.
எப்படி எடுப்பது
மூக்கிரட்டை வேர் சாறு 15-20 கிராம் வரை நீரில் கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் கணுக்கால் வீக்கம் குறையும்.
சிறுநீரகக்கற்கள் (5-9 mm) வரை இருப்பவர்கள் மூக்கிரட்டை விதை 20 கிராம் அளவு எடுத்து கஷாயம் ஆக்கி 40 மில்லி வரை குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் வெளியேறும்.
சிறுநீர்த்தொற்று இருப்பவர்கள் மூக்கிரட்டை, நெருஞ்சி மற்றும் தனியா விதைகள் போன்றவை சேர்த்து கஷாயமாக்கி குடிக்கலாம். இது தொற்றை சரி செய்யும்.
வெண்படல அழற்சி பிரச்சனை இருந்தால் இலைகளை அரைத்து சாறு எடுத்து கண்களின் மேல் தடவி வரலாம்.
மாலைக்கண் நோய்க்கு பசும்பாலில் மூக்கிரட்டை சாறை கலந்து குடித்துவரலாம்.
மூக்கிரட்டை இலையை பேஸ்ட் ஆக்கி கண்களில் மேல் தடவி வந்தால் இமைவீக்கங்கள் குணமாகும்.
பித்தப்பை கற்களை வெளியேற்ற மூக்கிரட்டையை எப்படி பயன்படுத்துவது?
பித்தப்பை கற்கள் வெளியேற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல. பித்தப்பை கற்களால் உண்டாகும் வலி தாங்க கூடியதும் அல்ல. பித்தப்பை கற்கள் தீவிரமானால் பித்தப்பை எடுப்பது மட்டுமே வலி என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆரம்ப கட்டத்தில் பித்தப்பையில் கல் இருந்தால் மூக்கிரட்டை சேர்த்து வரலாம்.
எப்படி பயன்படுத்துவது?
மூக்கிரட்டை முழுச்செடியை எடுத்து இளநீர் விட்டு அரைத்து சிறு நெல்லி அளவு எடுத்து 2 கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும். இது பித்தப்பை கற்கள் மற்றூம் சிறுநீரக கற்கள் இரண்டையும் வெளியேற்றும்.
கல்லீரல் கோளாறுகளை சரி செய்யும் மூக்கிரட்டை
மஞ்சள் காமாலை கல்லீரல் ஆபத்தின் வெளிப்பாடே, கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் மூக்கிரட்டை உதவும்.
எப்படி பயன்படுத்துவது?
மூக்கிரட்டையை கீழாநெல்லியுடன் சேர்த்து செய்யப்படும் கஷாயம் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். கல்லீரலை வலுவாக்கும். இந்த மூலிகை உடல் சோர்வை போக்கும். முழுச்செடியுடன் இந்த கஷாயம் சேர்ப்பது குடல் பிடிப்பு குணப்படுத்தும். இரத்தத்தையும் சுத்திகரிக்கும். இதனால் கல்லீரலும் பலப்படும்.
பெண்கள் வெள்ளைப்படுதலுக்கு மூக்கிரட்டை எப்படி பயன்பட்டுத்துவது?
பெண்கள் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள், வெள்ளைப்படுதல் போன்றவற்றுக்கு மூக்கிரட்டை சேர்த்து வரலாம்.
எப்படி எடுப்பது?
மாதவிடாய் கோளாறுகள் மாதவிடாய் நின்ற பிறகு வரக்கூடிய அறிகுறிகளை குறைக்க முழுச்செடி கஷாயத்தை எடுத்துகொள்ளலாம்.
மூக்கிரட்டை வேர் பொடி அரிசி கழுவிய நீரில் சேர்த்து 2 கிராம் அளவு எடுத்து வருவது வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்யும். Tag Mookirattai Online