Shop

Horse Tail Millet / குதிரைவாலி அரிசி

(1kg)
Save ₹45.00

Original price was: ₹180.00.Current price is: ₹135.00.

Estimated delivery dates: Tuesday 24. June - Wednesday 25. June

குதிரைவாலி அரிசிக்கென்று தனிச் சிறப்புக் குணம் உண்டு. இந்த சிறு தானியம் எல்லா வயதினருக்கும் ஏற்ற சத்துமிகுந்த உணவாகும். இதை ஏன் குதிரைவாலி என்று அழைக்கப்படுகிறது தெரியுமா? கதிர் விட்ட பின் தானியங்கள் கொத்தாகக் குதிரைக்கு வால் முடி தொங்குவது போலக் காட்சி தருவதால் இதற்குக் குதிரைவாலி என்ற காரணப் பெயர் உண்டானது.

மானாவாரி பயிர் என்பதால் நச்சுத்தன்மை இருக்காது. அதே நேரத்தில் உமி நீக்கி நீண்ட நாட்கள் வைத்திருக்கவும் முடியாது. இது புற்கள் வகையைச் சேர்ந்த தாவரம் ஆகையால் இதை புல்லுச்சாமை என்றும் அழைப்பதுண்டு.

மற்ற சிறுதானிய வகைகளை விட அளவில் மிகமிகச் சிறியது. சிறியதானாலும் இதில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பச்சையம் இல்லாத சிறுதானியமாகும். மேலும் இதில் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது. குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. கால்சியம், பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் இருக்கிறது. குறிப்பாக இதில் மாவுச் சத்து மற்றும் கொழுப்புச் சத்தும் அதிகமாகக் காணப்படுகிறது.

சராசரியாக 100 கிராம் குதிரைவாலியில் புரதச் சத்து 6.2 கி, கொழுப்புச் சத்து 2.2 கி, தாது உப்புகள் 4.4 கி, நார்ச்சத்து 9.8 கி, மாவுச்சத்து 65.5 கி, கால்சியம் 11 மி.கி, பாஸ்பரஸ் 280 மி.கி அடங்கியுள்ளது.

Availability:798 in stock

Weight1 kg
Customer reviews
0
0 ratings
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Products in My Cart!
  • No products in the cart.
Home
Account
0
Orders
Tracking
Search
×
0